துவக்கம்
எல்லாம் ஒரு நொடியில், பல ஆண்டுகள் முன்
பையனாயிருந்த நான் பெரியவன் ஆனேன்:
சட்டென்று துவங்கியது என் வாழ்க்கை!
கண்டேன் கண் முன்னிருந்த என் உலகை - எனவே
குதிரை மீதிருந்து கலப்பை செலுத்தியவன்
வியர்த்து நிற்கிறான் முதல் மலை உச்சியில்
ஆற்றுப் படுகைகளை விட்டு வந்து
கீழுள்ள பள்ளத்தாக்குகளை உழுத பின்
உழ வேண்டிய மலைப்புறத்தைக் காண்கிறான்
தன் கருவியை மழுங்க வைக்கும் வெற்றுப் பாறையை
காற்றில் மிதந்து வரும் இடியோசை
தலைக்கு மேல் வீற்றிருக்கும் கரும்பாறை தனியே
காத்திருக்கிறது இப்போது.
-உழட்டும் அவன், துணிவிருந்தால்